இலங்கை
ஆற்றலாளர் விருது!
ஆற்றலாளர் விருது!
(ஆதவன்)
செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனின் 63ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அறநிதியச் சபை நடத்தும் இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் தலைமை விருந்தினராக இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பங்கேற்கவுள்ளார்.
கொழும்பு லங்கா மருத்துவமனை இருதய சத்திர சிகிச்சை நிபுணர் ஞானச்சந்திரமூர்த்தி காந்திஜி மற்றும் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த சாதனையாளர் திருகோணமலை இந்துக்கல்லூரி மாணவன் ஹ.தன்வந்த் ஆகியோர் விருதுகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். (ச)