சினிமா

இது மட்டும் தான் ஆறுதல்! தனது அம்மா குறித்து சத்யராஜ் மகள் திவ்யா!

Published

on

இது மட்டும் தான் ஆறுதல்! தனது அம்மா குறித்து சத்யராஜ் மகள் திவ்யா!

சினிமா துறையில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் நடிகர் சத்யராஜ். இவருக்கு சிபி ராஜ் என்ற மகனும் மகள் திவ்யா சத்யராஜ் என்ற மகளும் இருக்கிறார்கள். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார், மகிழ்மதி என்ற இயக்கத்தின் மூலம் கடந்த 4 வருடங்களாக தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கி வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் இவரது அம்மா குறித்து வெளியான தகவல் பேசுபொருளானது. அதாவது கடந்த 4 ஆண்டுகளாக தனது அம்மா கோமாவில் இருப்பதாக தெரிவித்திருந்தார். இது குறித்து உருக்கமான பதிவையும் பகிர்ந்துள்ளார். d_i_aகடந்த சில ஆண்டுகளாக அம்மாவின் உடல்நிலை காரணமாக வாழ்க்கை சவாலாக மாறியது. வீட்டில் ஐசியூவை வைத்து கோமா நோயாளியைக் கவனிப்பது போல பார்த்து கொள்கிறேன். நானும் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் வேதனையான கட்டத்தை கடந்து வருகிறேன் ஊட்டச்சத்து நிபுணராக  இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இது குறித்து நடிகர் சத்தியராஜ் அவர்களும் சமீபத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version