இந்தியா

இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு.. ஜம்மு – காஷ்மீரில் மகிழும் சுற்றுலாப் பயணிகள்!

Published

on

இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு.. ஜம்மு – காஷ்மீரில் மகிழும் சுற்றுலாப் பயணிகள்!

குளிர்காலத்தையொட்டி, வட மாநிலங்களில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பகல்காம் பெட்டாப் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்த ஆண்டில் முதல்முறையாக பனிப்பொழிவு தொடங்கியது.

Advertisement

இதேபோல, யூனியன் பிரதேசத்தின் மேல் பகுதியில் உள்ள சோன்மார்க் பகுதியிலும் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. குல்மார்க், சோனாமார்க் போன்ற பகுதிகளிலும் பனிப்பொழிவு நிலவியது.

பனிப்பொழிவு காரணமாக, பல்வேறு பகுதிகளிலும் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக, ஸ்ரீநகரில் ஒரு டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

Advertisement

காசிகண்டில் மைனஸ் பூஜ்யம் புள்ளி 4 டிகிரி செல்சியஸும், பஹல்காமில் மைனஸ் ஒன்று புள்ளி 5 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவானது. இதனால் ஜம்மு காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த பனிச்சூழலை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version