இலங்கை

இலங்கையில் புதிய தாவர இனம் கண்டுபிடிப்பு

Published

on

இலங்கையில் புதிய தாவர இனம் கண்டுபிடிப்பு

தாவரவியல் பூங்காத் திணைக்களத்தின் தேசிய ஆராய்ச்சிக் குழு இலங்கையிலிருந்து புதிய தாவர இனத்தை கண்டுபிடித்துள்ளது.

இலங்கையின் மத்திய மலைநாட்டில் உள்ள நுவரெலியா, ஹக்கல இயற்கைப் பாதுகாப்புப் பிரதேசத்தில் இருந்து இந்த புதிய தாவர இனத்தை ஆய்வுக் குழுவால் அடையாளம் காண முடிந்தது, மேலும் தாவரவியல் ரீதியாக கோலியஸ் ஹக்கலென்சிஸ் அபேசேகர, கசுனிகா, ஹலுவான ,நீலாங்க என பெயரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

2022 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து மத்திய மலைப்பகுதியை உள்ளடக்கிய ஹக்கல கடுமையான இயற்கை காப்புக்காடுகளில் தொடங்கப்பட்ட தாவர ஆய்வு நடவடிக்கைகளின் விளைவாக 1900 முதல் 2100 மீட்டர் உயரத்தில் 2024 ஆம் ஆண்டில் இந்த புதிய தாவர இனத்தை ஆராய்ச்சி குழு கண்டுபிடிக்க முடிந்தது.

சுமேதா அபேசேகர, ஓவிடிமுல்லகே கசுனிகா, நிஷாந்தி ஹலுவான மற்றும் நந்துன் நீலங்க ஆகியோரின் ஆய்வுக் குழு இந்த புதிய தாவர இனத்தை புதினா (லாமியேசி) குடும்பத்தைச் சேர்ந்த கோலியஸின் புதிய இனமாக அடையாளம் காண முடிந்தது.

பெப்ரவரி 2024 இல், தேசிய தாவரவியல் பூங்காவின் தேசிய மூலிகை நிலையம், தேசிய தாவர ஆய்வுத் திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தின் ஹக்கல பகுதியில் தாவரவியல் ஆய்வின் போது இந்த புதிய கண்டுபிடிப்பைச் செய்ய முடிந்ததாக அறிவித்தது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version