இலங்கை
உந்துருளி விபத்து ; ஒருவர் உயிரிழப்பு
உந்துருளி விபத்து ; ஒருவர் உயிரிழப்பு
(ஆதவன்)
திருகோணமலையில் இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றொருவர் படுகாய மடைந்த நிலையில் கிண்ணியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு திருகோணமலை தலைமை வீதியின் வெள்ளை மணலில் இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா ஜித்தா நகரைச் சேர்ந்த முஹம்மது நசுறுல்லாஹ் (வயது-43) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கிண்ணியாவில் இருந்து குச்சவெளிக்கு உந்துருளியில் சென்றவரும், திருகோணமலையிலிருந்து கிண்ணியா நோக்கி உந்துருளியில் வந்தவருமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். (ச)