இந்தியா

 ஐயப்ப பக்தர்களுக்கு அலெர்ட்… பம்பா நதியில் வெள்ளப்பெருக்கு… கட்டுப்பாடு விதித்த கேரள அரசு…

Published

on

 ஐயப்ப பக்தர்களுக்கு அலெர்ட்… பம்பா நதியில் வெள்ளப்பெருக்கு… கட்டுப்பாடு விதித்த கேரள அரசு…

ஐயப்ப பக்தர்களுக்கு
– புதிய கட்டுப்பாடுகளை விதித்த கேரளா அரசு

Advertisement

கேரளா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் கவனத்துடன் ஐயப்பனை தரிசிக்க வர வேண்டும் என பத்தினம் திட்டா ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டால் நாட்டில் உள்ள அனைத்து ஆன்மீக பக்தர்கள் ஐயப்ப சுவாமி மாலை அணிவித்து கடுமையான விரதம் மேற்கொண்டு சபரிமலை வந்து ஐயப்ப சுவாமியை தரிசித்து வருவார்கள்.

கடந்த மாதம் ஐயப்ப சுவாமியின் சீசன் துவங்கி மாலை அணிவித்து பக்தர்கள் சபரிமலை வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கேரள அரசு செய்து வருகிறது. இந்நிலையில், தற்போது கனமழை மற்றும் மூடுபனி காரணமாக சபரி மலைக்கு நடந்து செல்லும் புல்மேடு, பெரியபாதை, வனப்பாதை ஆகிய வனப்பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பக்தர்கள் வனப்பகுதிகளுக்கு செல்லவும், ஆறுகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பம்பா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஆறுகளில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம்” என பத்தினம் திட்டா ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version