சினிமா

ஒரு BREADக்கு ஓயாம வறுத்தெடுத்த விஜய் சேதுபதி.. இப்படியொரு பாரபட்சம் தேவையா?

Published

on

Loading

ஒரு BREADக்கு ஓயாம வறுத்தெடுத்த விஜய் சேதுபதி.. இப்படியொரு பாரபட்சம் தேவையா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது. ஆரம்பத்தில் விஜய் சேதுபதிக்கு அதிக ஆதரவு கொடுத்த ரசிகர்களே அவரது நடவடிக்கை காரணமாக தமது வெறுப்புகளை கொட்டித் தீர்த்து  வருகின்றார்கள்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவு காணப்படுகின்றது. இதன் காரணத்தினால் இதுவரையில் ஏழு சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்றதோடு அதனை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார்.இம்முறை ஆரம்பிக்கப்பட்ட எட்டாவது சீசனில் உலகநாயகன் கலந்து கொள்ளாத நிலையில், அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி களமிறங்கினார். ஆரம்பத்தில் இவருக்கு எதிராக பல நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் குவிந்தது. ஆனாலும் அதனை முதலாவது நிகழ்ச்சியிலேயே தவிடு பொடியாக்கி இருந்தார் மக்கள் செல்வன்.d_i_aஎனினும் போகப் போக விஜய் சேதுபதியின் நடவடிக்கைகள் ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாகி வருகிறது.. அதாவது போட்டியாளர்களை கேள்வி கேட்கும் விஜய் சேதுபதி, அவர்களை முழுமையாக பதில் சொல்ல விடாமலும் அவர்களை அசிங்கப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டு இருக்கின்றார். அத்துடன் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் அத்துமீறல்களை தட்டிக் கேட்கவில்லை என்ற கருத்தும் காணப்படுகிறது.இந்த நிலையில், கடந்த வாரம் ஒரு பிரட்டுக்கு ஓயாமல் மஞ்சரியை  ஒரு மணி நேரம் வறுத்தெடுத்த விஜய் சேதுபதி, பிரியாணியை திருடித் திண்ண கூட்டத்தை சிரிச்சிட்டு சாதாரமா கடந்து போயிட்டாரு.. எதற்காக இந்த பாராபட்சம்? என்று தற்போது இணையவாசிகள் பலரும் தமது கேள்விகளை முன்வைக்க தொடங்கியுள்ளார்கள்.ஏற்கனவே விஜய் சேதுபதி சாச்சனாவுக்கு தனது ஆதரவை வழங்கி அவர்தான் காப்பாற்றி வருகின்றார் என்ற ஒரு கருத்து காணப்படுகின்றது. அத்துடன் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்களை சரியாக தட்டிக் கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டும் காணப்பட்டது. தற்போது அவர் தொடர்ச்சியாகவே மஞ்சரிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றமை ரசிகர்களை மேலும் வெறுப்பாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version