இலங்கை

கட்டுநாயக்காவில் பிரித்தானிய வாழ் இலங்கை தமிழர் கைது தொடர்பில் வெளியான புதிய தகவல்

Published

on

கட்டுநாயக்காவில் பிரித்தானிய வாழ் இலங்கை தமிழர் கைது தொடர்பில் வெளியான புதிய தகவல்

இலங்கையில் இருந்து தப்பிச் சென்று பிரித்தானிய குடியுரிமை பெற்று வாழ்ந்து வரும் நபரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தில் கிளிநொச்சி, ஊராச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த சந்தேக நபர் 2009ஆம் ஆண்டு நாட்டிலிருந்து இருந்து பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்று அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.

இதனையடுத்து, பிரித்தானியாவில் இருந்தவாறு, இலங்கையில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்பிற்கு கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் பணத்தை விநியோகித்து இரு மாவட்டங்களில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்களுக்கு பணத்தை கொடுத்துள்ளார்.

Advertisement

இது குறித்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து, அந்த பிரிவின் அதிகாரிகள் 31.05.2012 அன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கையிட்டு அவருக்கு எதிராக விமானப் பயணத்தடையை விதித்தனர்.

இதனை அறியாத சந்தேக நபர், கடந்த 30ஆம் திகதி காலை 10.32 மணியளவில் பாரிஸிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த போது, குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸாருடன், இந்த நபரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Advertisement

தற்போது கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version