இலங்கை

கண்டி நட்சத்திர ஹோட்டலில் திருட்டு!

Published

on

கண்டி நட்சத்திர ஹோட்டலில் திருட்டு!

கண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது தமது 9 இலட்சம் ரூபா பணமும் மூன்று தங்க மோதிரங்களும் திருடப்பட்டுள்ளன என்று அவுஸ்ரேலிய பெண் ஒருவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டில்,

Advertisement

கடந்த 20 ஆம் திகதி மாலை 4 மணியளவில் இரு பெண்களுடன் ஹோட்டலுக்குத் தான் வந்தார் எனவும், 21 ஆம் திகதி காலை அறைக்குள் யாரோ நுழைந்து இந்தத் திருட்டைச் செய்துள்ளனர் எனவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

மேலும்  திருட்டு சம்பவத்தில் தனது சுகாதார அட்டை மற்றும் இரண்டு கிரெடிட் கார்டுகளும் திருடப்பட்டுள்ளன என்றும் 

சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ராஜபக்‌ஷ தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.[ ஒ ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version