இலங்கை
குரும்பை விழுந்ததில் நபர் மரணம்
குரும்பை விழுந்ததில் நபர் மரணம்
குரங்கு பறித்த குரும்பை நபரொருவரின் கழுத்தில் விழுந்ததில் நபர் உயிரிழந்த சம்பவமொன்று புலத் கொஹுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 81 வயதான ஏ.ஜி.ஜயசேன என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டுக்கு அருகே இருக்கும் தென்னை மரங்களில் இருந்து விழுந்துகிடந்த தேங்காய்களை கடந்த 27ஆம் திகதியன்று பொறுக்கி கொண்டிருந்த போது, தென்னை மரத்தில் இருந்து குரும்பை குரங்கு பிடிங்கியுள்ளது.
அதன்போதே அந்த குரும்பை, அந்நபரின் கழுத்து பகுதியில் விழுந்துள்ளது.
கழுத்தில் விழுந்தது. பின்னர் குறித்த நபர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 29ஆம் திகதி உயிரிழந்த நிலையில்
புலத் கொஹுபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.