இலங்கை
குளவிக் கொட்டுக்கு இலக்கான 37 மாணவர்கள் மருத்துவமனையில்!
குளவிக் கொட்டுக்கு இலக்கான 37 மாணவர்கள் மருத்துவமனையில்!
திருகோணமலை கிண்ணியா வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட தேசிய பாடசாலை ஒன்றில் குளவி கொட்டுக்கு இலக்காகி 37 மாணவர்கள் கிண்ணியா தள மருத்துவமனையில் சேர்க்க்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (30) காலை இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பாடசாலை வளாகத்தில் குளவி கூடு ஒன்று இருந்ததாகவும் குறித்த குளவி கூடு கலைந்தமையினால் மாணவர்கள் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குளவி கோட்டுக்கு இலக்கான 21 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியதாகவும் ஏனைய மாணவர்கள் தொடர்ந்தும் கிண்ணியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலை சமூகம் கேட்டுக் கொண்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிண்ணியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஞ)