இலங்கை

சூப்பர் சிங்கர் ஜூனியரில் அசத்த வரும் யாழ்ப்பாண சிறுமி!

Published

on

சூப்பர் சிங்கர் ஜூனியரில் அசத்த வரும் யாழ்ப்பாண சிறுமி!

  தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சியால விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் – 10 போட்டியில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிந்துமயூரன் – பிரியங்கா என்ற 11 வயதுடைய சிறுமி போட்டியிடவுள்ளார்.

போட்டியாளர்களின் தெரிவுகள் யாவும் நிறைவுபெற்ற போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது.

Advertisement

சிந்துமயூரன் – பிரியங்கா, சிறுவயது முதல் இசையில் ஆர்வம் காட்டி வந்தநிலையில் ,
அவரது குரலின் இனிமை மற்றும் பாடல் திறமை போன்ற காரணங்களால் மேடை இசை நிகழ்வுகளில் அவருக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் – 10 போட்டியாளர்கள் தெரிவில் அவரும் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் சிறுமிக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version