இலங்கை
சோறு வழங்க மறுத்த கிராமசேவகர் – பருத்தித்துறை பிரதேச செயலகம் முன் ஆர்ப்பாட்டம்!
சோறு வழங்க மறுத்த கிராமசேவகர் – பருத்தித்துறை பிரதேச செயலகம் முன் ஆர்ப்பாட்டம்!
அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்தத்தின் போது பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்திலிருந்த குடும்பங்கள் சிலவற்றிற்கு கிராம சேவகர் உணவு வழங்காமையால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கற்கோவளம் கிராம மக்களுக்கும், கற்கோவளம் கிராம அலுவலருக்கும் இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தால் தனது கடமைக்கு இடையூறு விளைவித்தார் என கூறி கற்கோவளம் கிராம சேவகர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடு காரணமாக நேற்றையதினம் இருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த கற்கோவளம் கிராம சேவகரால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று காலை போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதில் தமது வீட்டில் மழை வெள்ளம் தேங்கியதால் தாம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்ததாகவும், அங்கு கிராம சேவகர் வேண்டு மென்று தம்மை புறக்கணித்து தமக்கு உணவு வழங்கவில்லை என்றும், இதனை கிராம சேவகரிடம் கேட்டமையாலேயே கிராம சேவகரது கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்று தெரிவித்து கிராம சேவகர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரல் இருவர் கைது செய்யப்பட்டனர் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலரிடம் கேட்டபோது பக்கச்சார்பற்ற விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததுடன், ஏதாவது முறைகேடுகள் இடம்பெற்றால் உரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நிலமைகளை பேசி தீர்த்துவைத்ததுடன் உரியவர்கள் மீதி பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். (ப)