இலங்கை
ஜனாதிபதி- திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திப்பு!
ஜனாதிபதி- திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திப்பு!
திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் நேற்று புதன்கிழமை (31) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பிலும் அதற்குரிய தீர்வுவுகள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரர். இரா. சம்பந்தனின் மறைவின் பின்னர் கடந்த மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட அவர் சில நாட்களுக்கு முன்னர் அரசாங்கத்திடம் இருந்து 2 கோடி ரூபா ஒதுக்கீட்டைப் பெற்று பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிக்காக ஒதுக்கியிருந்ததுடன் ஏனைய அபிவிருத்திகளுக்காக மேலும் 3 கோடி ரூபாவை கோரியும், மக்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் குறித்த சந்திப்பில் கலந்துரையாடியுள்ளார்.
தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை முன்னெடுக்கும் அதேவேளை சமாந்தரமாக அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு அமைவாகச் செயற்பட உள்ளதாகவும் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் மக்களுக்குத் தெரிவித்திருந்தார். (ச)