இந்தியா

டாப் 10 நியூஸ்: விழுப்புரத்தில் முதல்வர் ஆய்வு முதல் கனமழை விடுமுறை வரை!

Published

on

டாப் 10 நியூஸ்: விழுப்புரத்தில் முதல்வர் ஆய்வு முதல் கனமழை விடுமுறை வரை!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், மரக்காணம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 2) நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று தனது 92-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

பெரியார் சிலையை உடைப்பேன் எனவும், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி மீது விமர்சனம் செய்ததாகவும் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா மீது கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா தொடர்ந்த வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

Advertisement

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்ததால், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், ராணிப்பேட்டை, சேலம், வேலூர், தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

நாகை மாவட்டம் நாகூரில் உள்ள ஆண்டவர் தர்காவில் பெரிய கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விக்கிரவாண்டி – விழுப்புரம் இடையே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதால், பல்லவன், வைகை, சோழன், சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத், தேஜஸ் எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயில்கள் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர்!

Advertisement

டெல்லியில் தாங்க முடியாத அளவுக்கு எகிறும் காற்று மாசு… இன்று முதல் GRAP 3 அமல்!

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version