சினிமா

டாப் 5 ஹீரோக்களின் முதல் பட சம்பளம் எவ்வளவு தெரியுமா?. 250 ரூபாயில் வாழ்க்கையை ஆரம்பித்த சூப்பர் ஸ்டார்

Published

on

டாப் 5 ஹீரோக்களின் முதல் பட சம்பளம் எவ்வளவு தெரியுமா?. 250 ரூபாயில் வாழ்க்கையை ஆரம்பித்த சூப்பர் ஸ்டார்

இப்போதைய தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் எல்லாம் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சம்பளம் 200 கோடியை தாண்டி விட்டதாகவும், விஜய் 200 கோடி சம்பளம் வாங்க போகிறார் என்று கூட செய்திகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன. இந்த ஹீரோக்கள் முதன் முதலில் அறிமுகமான படத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்று தெரியுமா. அந்த லிஸ்ட்டை பற்றி பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய முதல் இடத்தை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஜெய்லர் படத்திற்கு பிறகு இவருடைய சம்பளம் 200 கோடியை தாண்டி விட்டது என்று சொல்லப்படுகிறது. ஆனால் ரஜினி முதன் முதலில் அறிமுகமான அபூர்வ ராகங்கள் படத்தில் 250 ரூபாய் சம்பளமாக பெற்று இருக்கிறார். மேலும் முதன்முதலாக ஹீரோவாக நடித்த படத்தில் 5000 ரூபாய் சம்பளமாக பெற்று இருக்கிறார்.

Advertisement

நடிகர் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்குள் வந்தவர். இவர் இன்று 150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் கமலின் முதல் படத்தின் சம்பளம் 500 ரூபாய் ஆகும்.

நடிகர் விஜய் தளபதி 69 படத்தில் 200 கோடி சம்பளமாக வாங்கப் போகிறார் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் 200 கோடி சம்பளத்தை விட்டுவிட்டு அரசியலுக்குப் போகிறார் என்று கூட பேசப்படுகிறது. விஜய் முதன் முதலில் வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இந்த படத்திற்கு அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 500 ரூபாய்.

நடிகர் அஜித்குமார் தற்போது ஒப்பந்தமாக இருக்கும் குட் பேட் அக்லி படத்திற்காக 160 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அஜித்குமார் முதன் முதலில் நடித்த படத்தின் பெயர் 2500 ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார்.

Advertisement

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் கால் பதித்து வருகிறார் நடிகர் தனுஷ். தனுஷுக்கு இப்போது ஒரு படத்திற்கு 80 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. இவர் தன்னுடைய முதல் படத்திற்காக 5000 ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version