சினிமா

டிசம்பரில் வெளியாகும் மூன்று பார்ட் 2 படங்கள்.. இந்தியன் 2 போல் காலை வராமல் இருந்தால் சரிதான்!

Published

on

டிசம்பரில் வெளியாகும் மூன்று பார்ட் 2 படங்கள்.. இந்தியன் 2 போல் காலை வராமல் இருந்தால் சரிதான்!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக அடுத்தடுத்த பாகங்கள் வெளியாவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் அரண்மனை 4 படம் வெளியாகி பெரிய அளவு வரவேற்பை பெற்றது. ஆனால் கமலின் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஆனாலும் இந்தியன் 3 படத்தை ஷங்கர் எடுத்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற டிசம்பர் மாதம் மட்டும் கிட்டத்தட்ட மூன்று பார்ட் 2 படங்கள் வெளியாக இருக்கிறது. அது என்னென்ன படங்கள் என்பதை இப்போது பார்க்கலாம்.

Advertisement

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி இருக்கும்தி ரூல் படம் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் முதல் பாகம் அமோக வரவேற்பை பெற்றது. இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் பெரிதும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் எதிர்பாராத வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது அர்ஜுன் இயக்கியுள்ள நிலையில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இந்த படம் டிசம்பர் 13 திரைக்கு வர உள்ள நிலையில் இப்போது மிர்ச்சி சிவா பல்வேறு ஊடகங்களில் ப்ரோமோஷன் செய்து வருகிறார். சூது கவ்வும் 2 படம் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் தான் .

Advertisement

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். விடுதலை 2 படம் வருகின்ற டிசம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதில் விஜய் சேதுபதியை சுற்றியே கதை நகர்கிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version