இலங்கை

தந்தை வழியில் மக்களுக்கான எனது பயணம் தொடரும்!

Published

on

தந்தை வழியில் மக்களுக்கான எனது பயணம் தொடரும்!

மலையக அரசியல் வரலாற்றில் 1994 ஆம் ஆண்டு எனது தந்தை மாற்றத்தை ஏற்படுத்தினார். உரிமை அரசியலுக்கும், அபிவிருத்திக்கும் முன்னுரிமை வழங்கினார். அதே வழியில் மக்களுக்கான எனது பயணம் தொடரும். மக்களுக்காக எனது குரல் பாராளுமன்றத்தில் நிச்சயம் ஓங்கி ஒலிக்கும் என்று ஜனநாயக ஐக்கிய குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளர் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

இராகலை ஹைபொரஸ்ட் பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
1994 ஆம் ஆண்டு சுயேச்சையாக களமிறங்கி எனது தந்தை வெற்றிபெற்றார். அவர் மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் செயற்பட்டார். ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறினார். மலையகத்தில் தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தார்.

எனினும், எமது தலைவரான சந்திரசேகரனின் மறைவின் பின்னர், எமது மக்களுக்கான பாராளுமன்ற குரல் மௌனித்துள்ளது என்றே கூறவேண்டும். காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. 

எமது மக்களுக்கான அவரிடம் பல்வேறு திட்டங்கள் இருந்தன. சமூகம் தொடர்பில் அவரிடம் கனவும் இருந்தது. எனவே, அந்த வெற்றிடத்தை என்னால் நிச்சயம் நிரப்ப முடியும். மலையகத்தை மாற்றத்தை நோக்கி அழைத்துச் செல்ல முடியும்.

Advertisement

கடந்தமுறை தனித்து வந்தேன், 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப் பெற்றன. அப்போது தொழிற்சங்கமில்லை, கட்சி இல்லை என்றார்கள். இன்று கட்சியில் வந்துள்ளேன், அதற்கு வேறு கதை கூறுகின்றனர். 

ஐக்கிய ஜனநாயகக் குரல் என்ற புதிய தேசிய கட்சியில் நான் இம்முறை போட்டியிடுகின்றேன். ஏனைய தேசிய கட்சிகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. புதிய முகங்கள் ஊடாக நிச்சயம் முன்னோக்கி செல்லலாம்.

நாம் கட்சிக்கு வாக்கு சேர்க்கவில்லை. நமது மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவே வாக்கு கேட்கின்றேன். காணி உரிமை, அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் பற்றி பேசி அவற்றை வெல்ல வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version