இலங்கை

திருகோணமலையில் பிரபல தனியார் மருத்துவமனையில் கத்திக்குத்துக்கு இலக்காகிய பெண்

Published

on

திருகோணமலையில் பிரபல தனியார் மருத்துவமனையில் கத்திக்குத்துக்கு இலக்காகிய பெண்

திருகோணமலையில் பிரபல தனியார் மருத்துவமனையின் உரிமையாளரின் மனைவி இன்று  (05) அதிகாலை கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை தனியார் மருத்துவமனை  உரிமையாளரின் மனைவியான ஏஞ்சலி சுமேத்ரா என்ற  63வயதுடயவர் எனவும் தெரியவந்துள்ளது.

Advertisement

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, 
வெளிநாட்டில் இருந்து இன்று  அதிகாலை வருகை தந்து மருத்துவமனை கட்டிடத் தொகுதியில் உள்ள  மூன்றாவது மாடியில் தனது அறையை திறப்பதற்காக சென்றபோது அறைக்குப் பக்கத்தில் இருந்த மைத்துனரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் கத்திக்குத்தை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையின் உரிமையாளரின் சகோதரரான 56 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version