இந்தியா

திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கிய 3 பேரின் சடலங்கள் மீட்பு.. மற்றவர்களின் நிலை?

Published

on

திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கிய 3 பேரின் சடலங்கள் மீட்பு.. மற்றவர்களின் நிலை?

திருவண்ணாமலையின் மலை அடிவாரப் பகுதியான வஉசி நகர் கருமாரியம்மன் கோயிலின் பின்புறத்தில் குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில் இப்பகுதியில் பெய்த தொடர் மழையால், மலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததில், இரண்டு வீடுகள் முற்றிலும் சிதிலமடைந்தன.

Advertisement

அதில் ஒரு வீட்டில் வசித்து வந்த தம்பதி, அவரது மகன், மகள் மற்றும் உறவினரின் மூன்று சிறுமிகள் என மொத்தம் ஏழு பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்று மாலை வீடுகள் இடிபாடுகளில் சிக்கிய நிலையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால், அவர்களால் மீட்புப்பணியை தொடர முடியவில்லை. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். ஆனால், இரவு நேரம் என்பதால், மீட்பு பணியை தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டது.

இதனால், இரவு முழுவதும் மீட்பு பணிகள் தொடங்கப்படவில்லை. அதிகாலையே பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மோப்ப நாய்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கிய சிறுவர்கள் உட்பட 7 பேரை தேடும் பணிகள் தொடங்கின.

#JUSTIN திருவண்ணாமலையில் பாறைகள் உருண்டு விழுந்து புதையுண்ட வீட்டில் இருந்து சிறுவன் (கௌதம்) சடலம் மீட்பு#Tiruvannamalai #Landslide #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/IoZZQpFly9

Advertisement

இதனிடையே மண்சரிவில் சிக்கியவர்களில் 3 பேரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மற்ற 6 பேரை மீட்கும் பணியில் பேரிடர் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Also Read :
அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ரூ.5000 நிவாரணம்… உத்தரவு பிறப்பித்த முதல்வர்

இதனிடையே திருவண்ணாமலையில் மீண்டும் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். திருவண்ணாமலை தீப மலையின் தென்கிழக்கு பகுதியில் சுமார் 2000 அடிக்கு மேல் மலையில் இருந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்திற்கு முன்பகுதியில் நிலச்சரிவு என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வஊசி நகர் மலைப்பகுதியில் 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்ட நிலையில் தற்போது 3 வது நிலச்சரிவு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version