இலங்கை

தெளிவூட்டல் செயலமர்வு!!

Published

on

தெளிவூட்டல் செயலமர்வு!!

எதிர்வரும் நவம்பர் 14 திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது வழங்கல் மற்றும் பாரமெடுத்தல் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியானின் ஒழுங்குபடுத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(05) இடம்பெற்றது.

வழங்கல் மற்றும் பாரமெடுத்தல் உதவித்தெரிவத்தாட்சி அலுவலர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடையங்கள் தொடர்பாகவும், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ச)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version