இலங்கை
நானுஓயா விபத்து ஒருவர் சாவு!
நானுஓயா விபத்து ஒருவர் சாவு!
நானுஓயா ரதெல்ல வீதியில் வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் நேற்று (01) மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கல்முனை பகுதியைச் சேர்ந்த அனிதா மொஹமட் அல்சார் (வயது 53) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கல்முனை சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த சிலர் நுவரெலியா நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தின் போது, வேனில் 18 பேர் பயணித்துள்ளதுடன், லொறியில் சாரதி மற்றும் உதவியாளர் பயணித்துள்ளனர். லொறியின் சாரதி மாத்திரமே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.