இலங்கை

நாளை 4 மணிநேர நீர்வெட்டு

Published

on

நாளை 4 மணிநேர நீர்வெட்டு

திருகோணமலை – கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அவசர திருத்தப் பணிகள் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில்  நீர் விநியோகத் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி நாளை (07) காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை இந்த நீர் துண்டிப்பு இடம்பெறவுள்ளது.

Advertisement

இவ் விடயத்தினை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எல்.சுபாகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், தம்பலகாமம், கிண்ணியா, பட்டினமும் சூழலும் ஆகிய பிரதேச செயலகப் பகுதியிலும் குச்சவெளி பிரதேச செயலக பகுதியின் இறக்கக் கண்டி பாலம் வரையான பகுதியிலும் நீர் விநியோகத் துண்டிப்பு நடைமுறைபடுத்தவுள்ளது.

இதன் மூலம் ஏற்படும் தடங்களுக்கு பாவனையாளர்களுக்கு தங்களது வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன்,  முன் கூட்டியே போதுமான நீரை சேமித்து வைக்குமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version