இலங்கை

நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள்! அதிபர்:ஆசிரியருக்கு விளக்கமறியல்!

Published

on

நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள்! அதிபர்:ஆசிரியருக்கு விளக்கமறியல்!

அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதில் 5 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மத்ரஸா பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மத்ரஸா பாடசாலையின் அதிபர் ஆசிரியர் ஒருவர் மற்றும் குறித்த உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவரும் நேற்று (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

கைது செய்தவர்களை நேற்று பிற்பகல் சம்மாந்துறை பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதையடுத்து மத்ரஸா பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 26ஆம் திகதி பிற்பகல் நேரத்தில் 11 மாணவர்கள் மற்றும் சிலர் பயணித்த உழவு இயந்திரம் நீரோட்டத்தில் சிக்கி கவிழ்ந்ததில் 6 மாணவர்கள், உழவு இயந்திர சாரதி உட்பட 8 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயினர்.சம்பவத்தில் உயிரிழந்த 5 மாணவர்களின் சடலங்கள் உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் அதில் பயணித்த மற்றுமொரு நபரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன மற்றைய மாணவனை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆபத்து காரணமாக பேருந்து சேவை கூட நிறுத்தப்பட்டிருந்த போதும் இராணுவத்தினரின் அறிவுறுத்தலை மீறி பணத்திற்காக பயணிகளை ஏற்றிச் செல்லும் உழவு இயந்திரத்தில் பிள்ளைகளை அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிபர் பணிப்புரை வழங்கியதாக பொலிஸாரின்  விசாரணைகளின் போது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version