இலங்கை

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் குடைசாய்ந்த கனரக வாகனம்

Published

on

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் குடைசாய்ந்த கனரக வாகனம்

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் லபுக்கலை குடாஓயா பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) பிற்பகல் கனரக வாகனமொன்று  குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. 

இதனால் சுமார் ஒரு  மணிநேரம் அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அவ்வீதியில் பாரிய வளைவுப் பகுதியில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, அதனால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புற்களை கொழும்பு துறைமுகத்திலிருந்து நுவரெலியா வழியாக அம்பேவல நியூசிலாந்து பாற்பண்ணைக்கு ஏற்றிச் சென்ற கனரக  வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

வீதியில் வாகனம் குடைசாய்ந்ததால் அவ்வீதியின் ஊடாக பயணித்த ஏனைய வாகனங்கள் வீதியின் இரு புறங்களிலும் பயணத்தை தொடர முடியாதவாறு நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டதன் காரணமாக சுமார் ஒரு மணிநேரம் அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன்போது, நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் அவ்வீதியில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version