இலங்கை

பதுளை பேருந்து விபத்து; அனைவரும் நலம்

Published

on

பதுளை பேருந்து விபத்து; அனைவரும் நலம்

துன்ஹிந்த – பதுளை வீதியில் நேற்று (01) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்து பதுளை போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டவர்கள் ஆபத்தான நிலையை கடந்துள்ளதாக மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட மருத்துவ அதிகாரி பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

காயமடைந்தவர்களின் தற்போதைய நிலை குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அனைவரும் தற்போது நலமுடன் உள்ளதாக அவர் தெரிவித்தார். 

Advertisement

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பத்து பேரில் சிலர் இன்று பொது விடுதிக்கு மாற்றப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“பேருந்து விபத்தில் காயமடைந்த 40 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பத்து பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அவர்களில் பெரும்பாலானோர் தற்போது குணமடைந்து உள்ளனர். காயமடைந்த அனைவரினதும் உயிர் ஆபத்து நீங்கிவிட்டது.  

Advertisement

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பத்து பேரில் சிலர் இன்று பொது வார்டுக்கு மாற்றப்படலாம். மேலும் சிலர் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்ட பின்னர் மருத்துவமனையில் இருந்து வௌியேறவுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி எந்தவொரு நோயாளியையும் விமானத்தில் கொழும்புக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து வசதிகளும் மருத்துவமனையில் உள்ளது” என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version