உலகம்

பாகிஸ்தானின் GDP ஒரே மாலையிலா..? மணமகனின் திருமண பரிசை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

Published

on

பாகிஸ்தானின் GDP ஒரே மாலையிலா..? மணமகனின் திருமண பரிசை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

Advertisement

சமூக வலைதளங்களின் அபரிமிதமான வளர்ச்சி, மக்களை திக்குமுக்காட வைக்கின்றன. உலகின் ஏதோ ஒரு கடைக்கோடி மூலையில் நடக்கும் ஒரு சிறிய விஷயம் கூட அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதோடு, டிரெண்டிங்கிலும் இடம்பிடிக்கிறது. சமூக வலைதளங்கள் மீதுள்ள இத்தகைய மோகத்தால், மக்களும் தொடர்ந்து வித்தியாசமான, விநோதமான வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், சமீப காலமாகவே இந்தியாவில் நடக்கும் திருமணங்களில், மணமக்களுக்கு வித்தியாசமான பரிசு கொடுப்பது, திருமணத்திற்கு பிறகு மணமகனை நண்பர்களுடன் சேர அனுமதிக்க பத்திரத்தில் கையெழுத்து வாங்குவது போன்ற விநோதமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பலரின் கவனத்தைப் பெற்றது.

அந்த வகையில், பாகிஸ்தானில் இதேபோன்ற ஒரு வித்தியாசமான சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த மணமகனுக்கு திருமணப் பரிசாக 35 அடி நீளமுள்ள பண மாலையை அவரது சகோதரர் பரிசாக வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

மணமகன் கிட்டத்தட்ட 2,000 கரன்சி நோட்டுகளால் ஆன மாலையை அணிந்திருப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது. இந்த பண மாலையின் மதிப்பு சுமார் 1 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் (சுமார் ரூ.30,000 இந்திய ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள கோட்லா ஜாம் பகுதியைச் சேர்ந்த மணமகனின் சகோதரரால் உருவாக்கப்பட்ட திருமண பரிசு, செல்வம் மற்றும் கொண்டாட்டத்தின் சின்னமாக வழங்கப்பட்டுள்ளது.

யூடியூப்பில் வெளியிடப்பட்ட வீடியோவில், பல ஆண்கள் சேர்ந்த ஒரு குழு பெரிய பண மாலையை, மிகவும் கவனமாக திருமண இடத்திற்கு கொண்டு வருவதைக் காண முடிகிறது. இதையடுத்து அந்த பண மாலையை அவர்கள் மணமகனுக்கு பரிசாக வழங்குகிறார்கள். வீடியோவாக பதிவு செய்யப்பட்ட இந்த தருணத்தை சமூக வலைதளத்திலும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, பலராலும் பகிரப்பட்டு இந்த வீடியோ வைராலானது.

Advertisement

ஆசியாவில் நடக்கும் திருமணங்களில் பண மாலைகளை போடுவது ஒன்றும் அசாதாரணமான விஷயம் இல்லை என்றாலும், பாகிஸ்தானிய மணமகனின் 35 அடி பணமாலை இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த இன்ஸ்டாகிராம் வீடியோவில் “பாகிஸ்தானில் எது வேண்டுமானாலும் நடக்கும்” என்று ஒருவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். மற்றொருவர் கேலியாக, “அவர் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் (GDP) அணிந்துள்ளார் என்று ஒருவரும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version