இந்தியா
பிகினி அணிந்து மணமேடை ஏறிய பெண்… சமூக வலைதளத்தில் பரவும் போட்டோ – உண்மை என்ன?
பிகினி அணிந்து மணமேடை ஏறிய பெண்… சமூக வலைதளத்தில் பரவும் போட்டோ – உண்மை என்ன?
சமூகவலைதளத்தில் ஆடைக்கட்டுப்பாட்டை உடைத்ததாக ஒரு மணப்பெண் பிகினி அணிந்த புகைப்படம் பரவி வருகிறது. இந்த புகைப்படம் லக்னோவில் திருமணத்தில் பங்கேற்ற ஒரு மணப்பெண்ணின் புகைப்படம் என கூறப்பட்டு பரவியது.
“லக்னோவை சேர்ந்த மணப்பெண், பிகினி அணிந்து பிற்போக்கான கலாச்சாரத்தை உடைத்துள்ளார்” என அந்த புகைப்படத்தின் கேப்ஷனில் எழுதப்பட்டிருந்தது.
பிகினி அணிந்து திருமண சடங்கில் கலந்துகொண்ட பெண்ணால் இணையத்தில் இரண்டு தரப்பான கருத்துக்கள் எழுந்தது. அவரின் சுதந்திரம் என சிலரும், திருமணத்தில் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என மற்றொரு தரப்பும் கூறி வந்தது.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதும், நியூஸ்18, அதை ரிவர்ஸ் இமேஜ் சர்ச்சிங் மூலம் சோதனை செய்தோம். அது முதன்முதலில் Reddit இல் “Marriage season” என்ற தலைப்புடன் பதியப்பட்டது. இந்த படம், “DesiAdultfusion” எனும் குழுவில் பதியப்பட்டுள்ளது. இந்த குழுவின் விளக்கத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட இந்திய கலாசார படங்கள் பதியப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Wtf is a BANARASI BIKINI ??????? pic.twitter.com/mxI53Ynqd2
அந்த படத்தை “TrueMedia.org” எனும் டூல் மூலம் ஆய்வு செய்ததில், அது AI தகுந்த கருவிகள் (Stable Diffusion, MidJourney, அல்லது DALL-E 2) மூலம் உருவாக்கப்பட்டது என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிலர், “செயற்கை நுண்ணறிவு படங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள்” என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த புகைப்படம் மற்றும் அதன் விளக்கங்கள் முழுமையாக செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை. இவை உண்மையான நிகழ்வு அல்லது கலாசார நடைமுறையாக எங்கும் பின்பற்றப்படவில்லை. இதுபோன்ற வைரல் தகவல்களுக்கு முன்னர், அது உண்மையா என உறுதி செய்யுதல் அவசியம்.