இலங்கை
பெண் பணியாளருக்கு பலவந்தமாக முத்தமிட்ட அதிகாரி!
பெண் பணியாளருக்கு பலவந்தமாக முத்தமிட்ட அதிகாரி!
திருகோணமலையில் பலவந்தமாக பெண் பணியாளரை முத்தமிட்ட அதிகாரிக்கு ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு தனக்கு கீழ் பணிபுரிந்த பெண் எழுத்தாளர் ஒருவரை கட்டித்தழுவி முத்தமிட்ட குற்றத்துக்காக நிறுவனத்தின் மனித வள மேலாளருக்கு ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை (24) தீர்ப்பளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் அவருக்கு மூன்று பிரிவுகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 7இலட்சத்து 50ஆ யிரம் ரூபா இழப்பீடு மற்றும் அரசுக்கு 75 ஆயிரம் ரூபா அபராதமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு திருகோணமலை மேல் நீதிமன்று குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்ததையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஞ)