சினிமா

பெரிய ஆஃபர்கள் வந்தும் மௌனம் காக்கும் கருஞ்சிறுத்தை.. விஜய்கின்னா மட்டும் ஒய்யாரமாய் பறக்கும் பச்சைக்கொடி

Published

on

பெரிய ஆஃபர்கள் வந்தும் மௌனம் காக்கும் கருஞ்சிறுத்தை.. விஜய்கின்னா மட்டும் ஒய்யாரமாய் பறக்கும் பச்சைக்கொடி

வாய்ப்புகள் இன்றி தவிக்கும் எவ்வளவோ இளம் இயக்குனர்கள் மத்தியில், ஐந்து படங்கள் இயக்கியும், மூன்று படங்கள் தயாரித்தும், மூன்று படங்களில் நடித்தும் இப்பொழுது இளம் இயக்குனர் ஒருவர் நல்ல கதைகளை வைத்துக்கொண்டு சரியான சந்தர்ப்பத்தையும், மாஸ் ஹீரோவையும் எதிர்பார்த்து வருகிறார்.

2013இல் இயக்குனர் அவதாரம் எடுத்த அவர் அடுத்தடுத்து நான்கு படங்களை இயக்கினார். படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. இதனால் தனக்கென ஒரு தனி வட்டாரத்தை கோடம்பாக்கம் பகுதியில் ஏற்படுத்திக் கொண்டார். பெரிய ஹீரோக்கள் அனைவரும் இவரை தேடும் அளவிற்கு படங்கள் ஹிட்டானது.

Advertisement

தமிழையும் தாண்டி இப்பொழுது பாலிவுட்டில் கொடி கட்டி பறப்பவர் இயக்குனர் அட்லி. ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் 2013ஆம் ஆண்டு இயக்குனராக அடி எடுத்து வைத்தார். அதன் பின் தெறி, மெர்சல், பிகில் என விஜய்யை வைத்து மட்டும் மூன்று மாஸ் ஹிட் படங்களை கொடுத்து அனைத்து ஹீரோக்களின் பார்வையேயும் பெற்றார்..

கடைசியாக இவர் எடுத்த ஜவான் படம் பாலிவுட்டில் மரண ஹிட்டு அடித்தது. சுமார் 1100 கோடிகள் வசூலித்து ஹிந்தி சினிமாவை ஆட்சி செய்யும் கான் வகையறாக்களை வாயை பிளக்க செய்தது. இப்பொழுது சல்மான் கானை வைத்து ஒரு படம் எடுக்க உள்ளார் அட்லி. அதற்காக ஃப்ரீ ப்ரொடெக்ஷன் வேலைகளையும் முடித்துவிட்டார்.

இப்பொழுது ஒரு வருடமாக எந்த படங்களும் இயக்காமல் இருக்கிறார். சல்மான் கான் வைத்து இயக்கும் படம் ஏன் இவ்வளவு தாமதமாகுது என்று தெரியவில்லை. ஏற்கனவே சன் பிக்சர்ஸ்க்கு இவர் ஒரு படம் விஜய்யை வைத்து பண்ணுவதாக அக்ரிமெண்ட் போடப்பட்டது. அந்தப் படம் என்றால் உடனே பண்ணலாம் என காத்திருந்தவருக்கு இப்பொழுது அனைத்தும் இருந்தும் படம் இயக்க நேரம் கூடி வரவில்லை.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version