இலங்கை

பொன்னாலையில் வீடொன்றில் அத்துமீறி நுழைந்த கும்பலால் பதற்றம்!

Published

on

பொன்னாலையில் வீடொன்றில் அத்துமீறி நுழைந்த கும்பலால் பதற்றம்!

பொன்னாலையில் வீடொன்றில் இளைஞர்கள் அடங்கிய கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்தோரை தாக்க முற்பட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறினர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

Advertisement

மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் பழைய மாணவர் சங்க கணக்கினை வெளிப்படுத்துமாறு  பாடசாலையின் பழைய மாணவர் சங்க உப தலைவர் கோரிக்கை விடுத்து வந்துள்ளார்.

தொடர்ச்சியாக கணக்கறிக்கை வெளியிடபடாத நிலையில் முகநூலில் குறித்த கணக்கினை பகிரங்கபடுத்துமாறு கோரியுள்ளார்.

இதனையடுத்து குறித்த உப தலைவரின் இல்லத்திற்குள் கும்பல் ஒன்று புகுந்து வீட்டிலிருந்தோரை தாக்கமுயன்று தகாத வார்த்தைகளால் பேசி சென்றுள்ளனர்.

Advertisement

தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version