இலங்கை

மட்டக்களப்பில் இடம்பெற்ற முன்னாயத்த கலந்துரையாடல்!!

Published

on

மட்டக்களப்பில் இடம்பெற்ற முன்னாயத்த கலந்துரையாடல்!!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை(07) நடைபெற்றது.

வடகீழ் பருவபெயர்ச்சி மழை ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய அனர்த்த முன்னாயத்தம் தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

Advertisement

மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலின் போது துறைசார் நிபுணர்களின் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

மேலும், வெள்ள நிலைமை ஏற்படும் வேளையில் வாக்குப் பொட்டிகளை பாதுகாப்பாக கொண்டு வருவதற்கு தேவையான வழித்தடங்களை அமைத்தல் மற்றும் வாக்களிக்க செல்லும் மக்களின் போக்குவரத்ததை சிறந்த முறையில் ஏற்படுத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லடி 243 இராணுவ கட்டளை அதிகாரி கேனல் பிரதீப்களுபான, மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவருபரஞ்சினி முகுந்தன், பிரதேச செயலாளர்கள், உயர் பொலிஸ் அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் ஏ.எஸ் எம்.சியாத், துறைசார் நிபுணர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது மக்களை பாதுகாப்பதற்கு தேவையான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன் படகு சேவைகள் போன்ற சேவைகளை தயார் நிலையில் வைப்பதற்கான வழிகாட்டல் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. (ச)

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version