இலங்கை

மட்டக்களப்பில் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்

Published

on

மட்டக்களப்பில் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு  மத்தியில் தேர்தல் மத்திய நிலையமான இந்து கல்லூரியில் இருந்து 442 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை இன்று (13) காலை 7.30 மணியில் இருந்து எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 4 இலச்சத்து 49 ஆயிரத்து 486 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், இவர்கள் வாக்களிக்க 442 வாக்களிப்பு நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

அதற்கான வாக்கு பெட்டிகள் இன்று காலை 7.30 மணிக்கு தேர்தல் மத்திய நிலையமான இந்துகல்லூரியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன.

இதில் தேர்தல் கடமைக்கு 6 ஆயிரத்து 750 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், வாக்கெண்ணும் நிலையமாக மட்டக்களப்பு இந்து கல்லூரியில், தபால்மூல வாக்குகளை எண்ணுவதற்காக 9 நிலையங்களும் ஏனைய வாக்குகளை எண்ணுவதற்காக 37 நிலையங்கள் உட்பட 46 நிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்களிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை 233 தேர்தல் சட்ட விதிகளை மீறிய சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் எந்தவிதமான தேர்தல் வன்முறைகளும் இதுவரை கிடைக்கப்படவில்லை என்பதுடன் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு கடமைகளில் பொலிசார் இராணுவத்தினர் விமானப்படையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

Advertisement

இந்த தேர்தலில் 5 பிரதி நிதிகளை தெரிவு செய்வதற்காக 22 கட்சிகள், 27 சுயேச்சைக் குழுகள் உட்பட 49 கட்சிகளை சேர்ந்த 392 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version