இலங்கை

மரம் நடுகை நிகழ்வு – 2024

Published

on

மரம் நடுகை நிகழ்வு – 2024

மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலை பிரிவில் யானைகள் கிராமத்திற்குள் உட்புகுவதை தடுக்கும் முகமாக பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தினியின் ஆலோசனையின் கீழ் பயனுள்ளதும் பாதுகாப்பானதும் எனும் தொனிப்பொருளில் தோடை மரங்கள் நடப்பட்டன.

இதன் மூலம் யானைகள் கிராமத்திற்குள் வருவதை தடுத்து பிரதேச மக்களை பாதுகாக்கவும் எதிர்காலத்தில் அவ் மரங்கள் மூலம் பயன்பெறும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் முதற்கட்ட நடவடிக்கையாகும். இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். (ச)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version