இலங்கை

மலையக ரயில் சேவை பாதிப்பு

Published

on

மலையக ரயில் சேவை பாதிப்பு

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் பாரிய கற்கள் வீழ்ந்தமையினால் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை பயணித்த பொடிமனிக்கே புகையிரதம் நிறுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெய்துவரும் மழை காரணமாக ஒஹிய, இதல்கஸ்ஹின்ன நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பாதையில் கற்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலான ரயில் நிறுத்தப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

புகையிரத பாதையில் விழுந்த கற்களை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version