இலங்கை

மழையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடி நிவாரணம்!

Published

on

மழையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடி நிவாரணம்!

கடும் மழையினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் நீரியல் வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையினால்  பொத்துவில் மீனவ மக்களுக்கு  ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய்ந்த பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Advertisement

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளதுடன் 

அந்த மாகாணங்களில் உள்ள மீனவர்கள் இந்த நெருக்கடியை கடுமையாக எதிர்கொண்டுள்ளதாகவும் 

16 படகுகள் முற்றாக அழிந்துள்ளதாகவும்  பல மீனவ குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும்  வாழ்வாதாரம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அறிவித்துள்ள ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version