இலங்கை

மின்னல் தாக்கி சிறுமி சாவு!

Published

on

மின்னல் தாக்கி சிறுமி சாவு!

மின்னல் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று பசறை, அம்பதென்ன பண்ணை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று (31) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

Advertisement

தந்தையும் சகோதரனும் வீட்டின் பின்புறத்தில் அஸ்திவாரத்தை வெட்டி கொண்டிருந்த நிலையில், அதற்கு உதவிய சிறுமியே இந்த அனர்த்தத்திற்கு  முகங்கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இவரது சகோதரரும் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தந்தைக்கு விபத்து எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version