இந்தியா

மீண்டும் சர்ச்சை… மதுரையில் ஆளுநர் நிகழ்ச்சியில் பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!

Published

on

மீண்டும் சர்ச்சை… மதுரையில் ஆளுநர் நிகழ்ச்சியில் பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!

Advertisement

தமிழ்நாட்டில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரையில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம், கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்த முறை பின்பற்றப்படவில்லை. விழா தொடக்கமாக தேசிய கீதமும் அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் என அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது.

ஆனால், தேசிய கீதத்திற்கு பதில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால் இரண்டு வரிகள் பாடியதும் இடையில் நிறுத்தப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.

நிகழ்ச்சியில் உரையாடிய ஆளுநர், புதிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு நம்பிக்கை, புதிய உந்துதலைக் கொடுக்கும் என்றார்.

Advertisement

விழாவின் இறுதியில் வழக்கம் போல் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் முதலில் தேசிய கீதம் பாடப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியது.

முன்னதாக சில வாரங்கள் முன், பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்றபோதும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் சர்ச்சை எழுந்தது. பாடலில், ‘‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’’ என்கிற வரியை பாடாமல் விட்டதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version