சினிமா
மீண்டும் தனுஷை தாக்கி பேசினாரா நயன்தாரா..? சர்ச்சையாகும் பதிவு..!
மீண்டும் தனுஷை தாக்கி பேசினாரா நயன்தாரா..? சர்ச்சையாகும் பதிவு..!
அதை பார்த்ததும் கோபமடைந்த நயன்தாரா 3 பக்கத்திற்கு சரமாரியான கேள்விகளுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணமாகி 2 வருடங்கள் கழித்து திருமண வீடியோ வெளியாகக் காரணமே தனுஷ்தான் என்று கூறப்பட்டது. அதாவது நயன்தாராவின் திருமண வீடியோவில் நானும் ரௌடிதான் பாடலை இணைக்க அனுமதி கேட்டு அதற்கு பதில் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். பின் டீசரில் மட்டும் பயன்படுத்தி வீடியோவை வெளியிட்டிருக்கின்றனர். அனுமதிக்கு வாய் திறக்காத தனுஷ் ரிலீஸ் ஆன பின் 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாரே என கோபத்தில் சரமாரி கேள்விகளுடன் அறிக்கை வெளியிட்டார். பின் அவருக்கு சில நடிகைகளும் ஆதரவு தெரிவித்தனர்.
அதற்குபின் சினிமா வட்டத்தில் சில சலசலப்புகள் வந்தன. அதில் விக்னேஷ் ஷிவன் படம் எடுக்கும்போது ஒரு பட்ஜெட் கூறியதாகவும், எடுத்து முடிக்கும்போது அந்த படத்தின் பட்ஜெட் 2 மடங்காக செலவானதாகவும் கூறப்படுகிறது. இப்படி படத்தின் பட்ஜெட் அதிகரிக்க இருவரின் காதல் விவகாரம்தான் காரணம் என்றும் சொல்லப்பட்டது. அந்த கோபத்தில்தான் தனுஷ் இருந்திருக்கிறார். ஏற்கெனவே இருவர் மீதும் கோபத்தில் இருந்ததால்தான் அவர் அதற்கு பதில் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தனுஷ் மற்றும் ஐஷ்வர்யாவுக்கு குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியிருந்தது. இதனால் இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். இதனால் தனுஷ் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
இந்நிலையில் நயன்தாரா இன்ஸ்டா ஸ்டோரியில் கர்மா பதிவு போட்டிருந்தார். அது தனுஷ் விஷயத்திற்காகத்தான் போட்டிருக்கார் என பலரும் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். அதில் அவர் ” நீங்கள் ஒருவரின் வாழ்க்கையை அழிக்க நினைத்தால் அது வட்டியுடன் திரும்ப கிடைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வாக்கியங்கள் தனுஷுக்கு நயன்தாரா சொல்வதுபோல் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.