இலங்கை
யானை தாக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாடசாலை மாணவன்!
யானை தாக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாடசாலை மாணவன்!
மூதூர் – ஸ்ரீ நாராயணபுரத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று (28) இடம்பெற்றுள்ளது.
கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மூதூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ நாராயணபுரத்தைச் சேர்ந்த இந்த மாணவன் கிளிவெட்டி மகாவித்தியாலயத்திற்கு பிரத்தியேக வகுப்பு ஒன்றிற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றபோது ஸ்ரீ நாராயணர் ஆலயத்திற்கு முன்னால் வைத்து யானை தாக்கியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ஞ)