இலங்கை

யாழில் குளித்துகொண்டிருந்த போது ஏற்பட்ட அசம்பாவிதம்… பரிதாபமாக உயிரிழந்த பூசகர்!

Published

on

Loading

யாழில் குளித்துகொண்டிருந்த போது ஏற்பட்ட அசம்பாவிதம்… பரிதாபமாக உயிரிழந்த பூசகர்!

யாழ்ப்பாண பகுதியொன்றில் வீட்டு கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்தவேளை தவறி கிணற்றுக்குள் விழுந்து பூசகர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தில் சுதுமலை தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் கருணாகரன் என்ற பூசகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பூசகர் மரணச் சடங்கு ஒன்றிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துக்கொண்டு இருந்தவேளை கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் கிணற்றுக்குள் மிதப்பதை அவதானித்த உறவினர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

Advertisement

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version