இலங்கை

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

Published

on

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

வவுனியா, ஓமந்தை-பரசன்குளத்திற்கு அண்மையில் நேற்று மாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஓமந்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஓமந்தை, பரசன்குளம் பகுதிக்கு கப் வாகனத்தில் சென்ற குழு ஒன்று கூரிய ஆயுதத்தால் குறித்த நபரை தாக்கியுள்ளனர்.

Advertisement

இதனையடுத்து காயமடைந்தவர் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், தனிப்பட்ட தகராறு காரணமாக இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவன் கப் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்
ஏனைய  சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச)
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version