இலங்கை

வானுடன் மோதிய பேருந்து கவிழ்ந்ததில் மூவர் சாவு; 42 பேர் காயம்.!!

Published

on

வானுடன் மோதிய பேருந்து கவிழ்ந்ததில் மூவர் சாவு; 42 பேர் காயம்.!!

மாத்தளை, லக்கல எலவாகந்த பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை(14) மாலை பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

சுற்றுலா சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளாகியுள்ளது.

Advertisement

வில்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை – மஹியங்கனை வீதியின் எலவாகந்த பிரதேசத்தில் தம்புள்ளையிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த வானுடன் மோதி அருகில் இருந்த மண்மேட்டுடன் மோதி கவிழ்ந்தது.

பேருந்தில் பயணித்த 37 பேரும் வானில் இருந்த 5 பேரும் படுகாயமடைந்து வில்கமுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் பேருந்தில் இருந்த இருவர் மற்றும் வானில் இருந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version