இந்தியா
“வெற்றி பெற்ற நடிகர் அரசியலுக்கு வந்துவிட்டார்… தோல்வியடைந்த நடிகர் துணை முதலமைச்சராகிவிட்டார்…” – அண்ணாமலை பேச்சு
“வெற்றி பெற்ற நடிகர் அரசியலுக்கு வந்துவிட்டார்… தோல்வியடைந்த நடிகர் துணை முதலமைச்சராகிவிட்டார்…” – அண்ணாமலை பேச்சு
தாம் வெளியூர் சென்ற 3 மாத காலத்தில் ஒரு நடிகர் அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், மற்றொரு நடிகர் துணை முதல்வர் ஆகிவிட்டதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் கல்வி பயில்வதற்காக கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் லண்டன் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்று தமிழகம் திரும்பினார்.
இதையடுத்து கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற ‘வாய்ஸ் ஆஃப் கோவை’ என்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அண்ணாமலை, “நான் வெளியூர் சென்றிருந்த இந்த மூன்று மாத காலத்தில் வெற்றி பெற்ற நடிகர் அரசியலுக்கு வந்து விட்டார். தோல்வி அடைந்த நடிகர் துணை முதலமைச்சராகிவிட்டார்” என விஜயையும் உதயநிதி ஸ்டாலினையும் பெயர் குறிப்பிடாமல் சுட்டிக்காட்டினார்.
மேலும் 10 தலைவர்களின் புகைப்படத்தை போட்டால் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற அரசியல் கட்சிகளும் வந்துவிட்டதாகக் கூறிய அவர், பிரதமர் மோடியைப் போன்று மக்களுக்கு எதிர்காலத்தில் எது தேவை என்பதை தொலைநோக்கு பார்வையுடன் செய்கின்ற அரசியல்வாதிகள் மிக மிக குறைவு எனத் தெரிவித்தார்.