இலங்கை
வெள்ளத்தில் மூழ்கிய உழவு இயந்திரம்; மேலும் ஒருவர் சடலமாக மீட்பு!
வெள்ளத்தில் மூழ்கிய உழவு இயந்திரம்; மேலும் ஒருவர் சடலமாக மீட்பு!
சம்மாந்துறை, மாவடிப்பள்ளியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போனவர்களில் மற்றுமொருவருவர் உயிரிழந்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் உழவு இயந்திரத்தின் சாரதிக்கு உதவியாக பயணித்த எனவும், அவர் வாகன புகைப் பரிசோதனை மேற்கொள்ளும் அதிகாரி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அதிகாரியினது சடலம் பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று மாலை வரை காணாமல் போன மாணவர்களில் நால்வர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்ததுடன் அவர்களின் சடலங்கள் தொடர்பான பிரேதப் பரிசோதனைகள் சம்மாந்துறை ஆதார மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள்து.
தொடர்ந்தும் காணாமல் போன ஏனைய இரு மாணவர்களையும் தேடும் பணிகள் தொடர்ச்சியாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (ச)