இலங்கை

வேடுவ சமூகத்தின் துணைத்தலைவருக்கு வாக்களிக்க அனுமதி மறுப்பு!

Published

on

வேடுவ சமூகத்தின் துணைத்தலைவருக்கு வாக்களிக்க அனுமதி மறுப்பு!

வேடுவ சமூகத்தின் துணைத் தலைவர் குணபண்டியலா எத்தோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பொதுத் தேர்தலில் வாக்களிக்க இடமளிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

தம்பானை கனிஷ்ட பாடசாலை வாக்களிப்பு நிலையத்திற்கு வாக்களிக்க வருகை தந்த குணபண்டியலா எத்தோ, ​​வேடுவ சமூகத்தின் பாரம்பரிய மரபின் பிரகாரம் கை கோடரியை தோளில் ஏந்தி வந்திருந்தார். 

Advertisement

கோடரியும் ஒரு ஆயுதம் என்ற வகையில், வாக்களிப்பு நிலையத்துக்குள் ஆயுதங்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்ற சட்டத்தின் பிரகாரம், வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய சிரேஷ்ட தலைமை அதிகாரி குணபண்டியலா எத்தோ குடும்பத்தினரை வாக்களிப்பு நிலையத்துக்கு நுழைய அனுமதி மறுத்துள்ளார்.

எனினும், வேடுவர் சமூகத்தின் தலைவரான ஊருவரிலாகே வன்னிலா எத்தோ மற்றும் அவரது சகபாடிகள் வழக்கம் போல் கோடாரியை ஏந்தி வாக்குச் சாவடிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version