இலங்கை

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இலங்கையில்!!!

Published

on

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இலங்கையில்!!!

(புதியவன்)

தலைமை அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்புக்கிணங்க ஆன்மீகக் குரு, அமைதித் தூதுவர் மற்றும் வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்று சனிக்கிழமை இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

Advertisement

அவரைக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வானூர்தி நிலையத்தில் வரவேற்றுள்ளார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நுவரெலியா சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ள  குடமுழுக்குப் பெருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளார். 

நாளை மாலை 5.15 மணிக்கு கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில் நடைபெறவுள்ள சத்சங்கத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

Advertisement

நாடளாவிய ரீதியில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களின் திறன்களை வளர்த்து அவர்களை வேலைக்குத் தயார்ப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வாழும் கலையின் 12 திறன் மேம்பாட்டு மையங்களைத் திறந்து வைக்கவுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்புக்கிணங்க, திங்கட்கிழமை (20) காலை 10 மணிக்கு திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள இந்து கலாசார மண்டபத்துக்கு பயணம் செய்யவுள்ளமையும் அங்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு மதிப்பளிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (ஏ)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version