தொழில்நுட்பம்
ஹோண்டா அக்டிவா இ Vs டி.வி.எஸ். ஐக்யூப்: இரண்டில் எது பெஸ்ட்?
ஹோண்டா அக்டிவா இ Vs டி.வி.எஸ். ஐக்யூப்: இரண்டில் எது பெஸ்ட்?
இந்திய சந்தையில் ஹோண்டா அக்டிவா சிறப்பாக விற்பனையாகும் ஸ்கூட்டராக உள்ளது. எனினும், மின்சார இருசக்கர வாகன உலகில் இதே இடத்தை தக்க வைத்துக் கொள்வது சற்று கடினம் தான். ஏற்கனவே மின்சார ஸ்கூட்டரில் TVS iQube மாடல் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. அதற்கு போட்டியாக Honda Activa e தற்போது களமிறங்கியுள்ளது. இந்த வாகனங்களின் செயல்திறன் மற்றும் பேட்டரி போன்ற அம்சங்களை இதில் பார்க்கலாம்.Honda Activa e vs TVS iQube — வன்பொருள் மற்றும் அம்சங்கள்Honda Activa e மற்றும் TVS iQube (3.4kWh வெர்ஷன்) ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களும் ஒரே மாதிரியான வன்பொருளைப் பகிர்ந்து கொள்கின்றன. எனினும் சில வேறுபாடுகள் இருக்கிறது. இரண்டுக்கும் முன்புறம் டெலஸ்கோப்பிக் ஃபோர்க்குகளில் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் டிஸ்க் பிரேக் இருக்கிறது. LED விளக்குகள் மற்றும் 12-இன்ச் டயர்கள் உள்ளன. TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகியவை இரு வாகனங்களுக்கும் ஒரே மாதிரியாக உள்ளது. பின்புற சஸ்பென்ஷனில் இவற்றில் வேறுபாடு உள்ளது. Honda Activa e பின்புறத்தில் மோனோஷாக் வகையில் உள்ளது. அதே நேரத்தில் iQube-ல் டுயல்ஷாக் சஸ்பென்ஷன் உள்ளது.iQube உடன் ஒப்பிடும்போது Honda Activa e ஸ்டோரேஜ் பகுதி மிகக் குறைவாக இருக்கிறது. இதில் இருக்கும் பேட்டரியே ஸ்டோரேஜ் இடத்தை அடைத்துக் கொள்கிறது. அதே நேரத்தில் TVS iQube இருக்கைக்கு அடியில் 32 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் யூனிட் பெறுகிறது.Honda Activa e vs TVS iQube – பேட்டரி பவர்டிரெய்ன் பகுதியில், Honda Activa e இரட்டை 1.5kWh பேட்டரி பேக்குகளைப் பெறுகிறது. அவை மாற்றக்கூடியவை எனினும் இவற்றை வீட்டில் சார்ஜ் செய்ய முடியாது. TVS iQube ஆனது சற்று பெரிய 3.4kWh பேட்டரி பேக்கைப் பெறுகிறது. இது அக்டிவாவை விட கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.ஏனெனில் ஹோண்டாவின் பேட்டரி மாற்றும் உள்கட்டமைப்பு காரணமாக அதன் விற்பனை மூன்று நகரங்களுக்கு மட்டுமே இருக்கும். அதே நேரத்தில் iQube க்கு வரம்புகள் இல்லை.Honda Activa e மூன்று ரைடு மோடுகளை பெறுகிறது. iQube இரண்டு ரைடு மோடுகளை பெறுகிறது. இருப்பினும், TVS iQube ஹோண்டாவை விட சில சிறப்பம்சங்களுடன் முன்னோக்கி இருக்கிறது. இதற்கான விலையை ஹோண்டா அடுத்த மாதம் அறிவிக்கிறது. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“