இலங்கை
4 வயதுக் குழந்தையை தாக்கிய பாதகன் கைது!
4 வயதுக் குழந்தையை தாக்கிய பாதகன் கைது!
(புதியவன்)
தனது 4 வயதான மகனுக்கு உணவூட்டும்போது, பிள்ளையை மிலேச்சத்தனமாகத் தாக்கிய கோழி சமிந்த அல்லது பிபில சமிந்த, திருகோணமலை, புல்மோட்டை, அரிசிமலையில் வைத்து பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொலியில் பிள்ளையைத் தாக்கும் காட்சி பகிரப்பட்டு வந்தது. இந்நிலையில், பிள்ளையைத் தாக்கியவரைப் பொலிஸார் கைது செய்ய முயன்றபோது அவர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று விட்டார். இதனையடுத்து வெலிஓயா பொலிஸார், முல்லைத்தீவு குற்றப் புலனாய்வுப் பிரிவு, புல்மோட்டை சிறப்புப் படைப்பிரிவு என்பன இணைந்து நடத்திய தேடுதலின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.இவருடன் வெலிஓயாவைச் சேர்ந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.(ப)