இந்தியா

8-ஆம் வகுப்பு மாணவர் கடத்தி, கொடூர கொலை – காரணம் இதுதானா?

Published

on

8-ஆம் வகுப்பு மாணவர் கடத்தி, கொடூர கொலை – காரணம் இதுதானா?

Advertisement

விரைந்து செயல்பட்ட போலீசார் அப்பகுதி முழுவதும் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்தனர். அப்போது, மர்ம நபர்கள் இரண்டு பேர் மாணவனை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த மோட்டார் சைக்கிள் சென்ற வழித்தடங்கள் அனைத்திலும் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியபோது, கர்நாடக மாநில எல்லையான மடக்கசீரா பகுதி வனப்பகுதியில் மாணவனை சடலமாகக் கண்டுபிடித்தனர்.

மாணவனை கடத்திய கும்பல், அவனை கழுத்தை அறுத்து கொலை செய்திருப்பது உறுதியாகியுள்ளது. சிறுவன் சேத்தன் குமார் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement

பள்ளி மாணவனை எதற்காக கடத்தினார்கள்? கடத்தப்பட்ட சிறுவனை எதற்காக கொலை செய்தார்கள்? பெற்றோருடன் ஏற்பட்ட முன்விரோதம்  காரணமாக சிறுவன் கொலையா? அல்லது கொலைக்காரர்களுக்கும் சிறுவனுக்கும் ஏதேனும் நேரடி தொடர்பா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

8ஆம் வகுப்பு மாணவர் கடத்தி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version